;
Athirady Tamil News

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட யுவதி..!!

0

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள விவேகானந்தபுரம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அரியநாயகம் நிருலக்சனி என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வீட்டில் சம்பவ தினமான நேற்று மாலை 5 மணியளவில் உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் கூரையில் சேலையினை போட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இதனைக் கண்ட தாயார் உடனடியாக சேலையை அறுத்து, மகளை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உயிரிழந்த நிலையில் தான் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 9 =

*