;
Athirady Tamil News

மேரிலேண்ட் துப்பாக்கி சூடு – வெள்ளை மாளிகை கடும் கண்டனம்..!!

0

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘கேப்பிட்டல் கெசட்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்த நபர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர், செய்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய ரமோஸ் என்பதும், செய்தி நிறுவனம் மீது அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அப்பாவி பத்திரிகையாளர்கள் பணியில் இருந்தபொது நடத்தப்பட்ட தாக்குதலானது, ஒவ்வொரு அமெரிக்கர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்’ என வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 9 =

*