;
Athirady Tamil News

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்..!! (படங்கள்)

0

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் இன்று கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டவர்கள் என தெரிவித்த மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பன்னிரண்டுபேர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொலிஸ் உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + seven =

*