;
Athirady Tamil News

சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று..!!

0

சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில்

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் 6பேர் கைது செய்யப்பட்டு 29.06.2018 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்படட்டது.

சிறுத்தை கொலை சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் நாலு சரணடைந்திருந்தார் அவர்களுடன் சேர்த்து 10 பேரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் 6 பேர் 29ம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மேலும் நால்வர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் அத்தனை பேரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*