;
Athirady Tamil News

திட்டமிட்டே தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்றார்கள்: சர்வேஸ்வரன்..!!

0

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டே தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக வடக்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இராணுவத்தினரைக் கொண்டு எமது மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை அழித்துத் தமது புதிய வரலாறுகளைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்தினருடன் இணைந்து சில தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு தோற்றுவிக்கப்படும் புதிய இடங்களைத் தொல்பொருள் அகழ்வுப் பிரதேசங்களாக அறிவித்துப் பாதுகாக்கின்றார்கள். இது எம் இனத்திற்கு இலங்கை அரசாங்கம் புரியும் மிகப்பெரிய துரோகம்.

ஆட்சியதிகாரமும் இராணுவ பலமும் அரசாங்கத்திற்கு இருப்பதால் எங்களது அடையாளங்களை அழித்து, எமது வரலாறுகளை மாற்றப் பார்க்கின்றார்கள்.

இவ்வாறு ஒரு இனத்தினது அடையாளத்தினை மாற்றி தமது வரலாறுகளுக்கான பதிவினை ஏற்படுத்தப் பார்க்கின்றார்கள். இது அடையாளத்திற்கான நெருக்கடி எனக் கூறப்படுகின்றது.

எனவே இவற்றினையெல்லாம் மீறி எமது இனம் கௌரவமாக வாழவேண்டுமாக இருந்தால், நாம் ஒரு வலிமையுள்ள இனமாக இருக்க வேண்டும். அதாவது சிறந்த ஒரு கல்விச் சமூகமாக நாம் மாற வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 9 =

*