;
Athirady Tamil News

சுழிபுரம் மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி மகஜர் கையளிப்பு..!! (படங்கள்)

0

சுழிபுரம் பாடசாலை மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

படுகொலைக்கு நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியைக் கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தவகையில் சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை பேரணியொன்றையும் நடத்தியிருந்தனர்.

சுழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் யாழ் சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + nineteen =

*