;
Athirady Tamil News

நீ அங்கே போகாதே குட்டி குரங்கின் பிடிவாதம்: தாய் குரங்கின் முரட்டு பாசம்..!!

0

மனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கேட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய கூடாது என்று சொன்னதை மீறிய குட்டியை “அன்பாக” கண்டித்தது.

பெய்ஜிங் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் குட்டி குரங்கு மனிதர்கள் போல பிடிவாதம் பிடிப்பதும் அம்மா குரங்கு பாசத்துடன் அங்கே போகாதே என்று சொல்லியும் போன குட்டி குரங்கை அங்கிருந்து முரட்டுத்தனமான அகற்றி அதன் பின் ஆழமாக அணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியது.

வனவிலங்கு காப்பகத்தில் இருந்த விளையாட்டு குதிரை மேல் ஏறி விளையாடிய குட்டி குரங்கை தடுக்க அந்த குதிரையின் மீது ஏறி பலமாக ஆட்டியது தாய் குரங்கு.

அதனால் கீழே விழுந்த குட்டி குரங்கை நம் அம்மாக்கள் விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்வதை போலவே தாய் குரங்கு தனது குட்டி குரங்கு விழுந்த உடன் வாரி எடுத்து அணைத்து கொண்டது..

பார்க்கவே மிக அழகான காட்சியான இந்த வீடியோவை அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் எடுத்தனர். குட்டி குரங்கின் பிடிவாதத்தையும் தாய்க்குரங்கின் சமயோஜித செயலையும் அங்குள்ளோர் வியந்து பாராட்டினர்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*