;
Athirady Tamil News

பிரித்தானியாவில் மனைவியின் படுக்கை அறை காட்சிகளை 3 ஆண்டுகள் படம் பிடித்த கணவன்: அதிர்ச்சி காரணம்..!!

0

பிரித்தானியாவில் தனது ஆசிரியர் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதி நபர் ஒருவர் அவரது படுக்கை அறையில் ரகசிய கமெரா பொருத்தி படம் பிடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

South Wales-ல் உள்ள Neath பகுதியில் குடியிருக்கும் 46 வயது பால் லூயிஸ் என்பவரே தமது ஆசிரியர் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி படுக்கை அறையில் இரகசிய கமெரா வைத்தவர்.

அந்த கமெராவில் பதிவான காட்சிகள் குறித்த ஆசிரியருக்கு வேறு எந்த நபருடனும் தொடர்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டினாலும், பால் லூயிஸ் தொடர்ந்து 3 ஆண்டுகள் படுக்கை அறை காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் லூயிஸ் மறைத்து வைத்திருந்த இரகசிய கமெராவானது அவரது மனைவியின் பார்வையில் பட்டுள்ளது. அதில் பதிவாகியிருந்த 30 படுக்கை அறை வீடியோக்களும் அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது

இதனையடுத்து நீதிமன்றத்தின் உதவியை நாடிய அந்த ஆசிரியர், தமது சந்தேக கணவருக்கு தண்டனையும் வாங்கித் தந்துள்ளார்.

ஆசிரியர் ஆன் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமெராவை கண்டுபிடித்த நாளே அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறும் நீதிமன்றம்,பாலியல் தொடர்பான நோக்கம் ஏதும் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*