;
Athirady Tamil News

பேஸ்புக்கில் விற்கப்படும் பிரித்தானிய போலி பாஸ்போர்ட்டுகள்: என்ன விலை தெரியுமா?..!!

0

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்வசாதாரணமாக போலி பிரித்தானிய பாஸ்போர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரித்தானியாவின் நிஜ பாஸ்போர்ட்டு மற்றும் போலியானவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

800 பவுண்ட்ஸ் கட்டணத்தில் விற்கப்படும் இந்த போலி கடவுச்சீட்டுகளின் காலாவதி 3 ஆண்டுகள் வரை எனவும் அந்த பேஸ்புக் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக புழக்கத்தில் உள்ள நிஜ பாஸ்போர்ட்டுகளின் அதே தரவுகளுடன் கூடிய போலி பாஸ்போர்ட்டுகளும் விற்பனைக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவ்வாறு வெளிப்படையாக போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுவது மிக எளிதில் பயங்கரவாதிகளின் கைகளில் சென்று சேரவும், அவர்கள் நாட்டில் மிக சுலபமாக ஊடுருவ வாய்ப்பாக அமையும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மட்டுமின்றி பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் தொடர்ந்து பெஸ்புக் தவறிவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள பாதுகாப்பு நிபுணர் ஒருவர்,பேஸ்புக் பயங்கரவாதத்தைம் ஊக்குவிப்பதாகவே இதை காண முடியும் என்றார்.

அரேபிய மொழ்யில் இயங்கும் ஒரு பேஸ்புக் பக்கமானது ஐரோப்பிய பாஸ்போர்ட்டுகள் விற்பனைக்கு கிடைக்கும் என வெளிப்படையாக விளம்பரம் செய்துள்ளது

மட்டுமின்றி 800 பவுண்ட்ஸ் முதல் 2,600 பவுண்ட்ஸ் கட்டணத்தில் நிஜ பாஸ்போர்ட்டு விற்பனைக்கு இருப்பதாகவும்,ஆனால் அதிகாரிகள் கைப்பற்றினால் தாங்கள் பொறுப்பல்ல எனவும் அந்த பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் இருந்து பாஸ்போர்ட்டு வாங்கியவர்களில் 10-ல் 7 பேர் எல்லையை கடந்துள்ளதாகவும் சிறப்பு கட்டணமாக 280 பவுண்ட்ஸ் செலுத்தினால் நாட்டின் எல்லையை கடத்தி விடுவதாகவும் உறுதி அளிக்கின்றனர்.

பிரித்தானிய கடவுச்சீட்டு ஒன்றிற்கு 2400 பவுண்ட்ஸ் கட்டணமாக கேட்கும் அந்த நிறுவனம், 90 சதவிகித நிஜ பாஸ்போர்ட்டுக்கு 1,700 பவுண்ட்ஸ் கட்டணம் என குறிப்பிட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*