;
Athirady Tamil News

பிரித்தானியாவில் தோழியிடம் வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞன்: ஆனந்த கண்ணீர் விட்ட தருணம்..!!

0

பிரித்தானியாவில் தன்னுடைய நீண்ட நாள் தோழியிடம், இளைஞர் ஒருவர் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் தாம்சன். இவரும் அலினா பாரெட் என்ற பெண்ணும் நீண்ட ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இருப்பினும் தாம்சனுக்கு அலினா பாரெட் மீது காதல் ஏற்பட, அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தது போன்று புகழ்பெற்ற பாப் இசைப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்த போது, தாம்சன் தன்னுடைய காதலை அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மத்தியில் அலினா பாரெட்டிடம் தெரிவித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அலினா ஆச்சரியத்தில் ஆனந்த கண்ணீர்விட்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*