;
Athirady Tamil News

வவுனியா மாணவியின் கல்வி நடவடிக்கைக்கான உதவி..!!

0

சேனைப்புலவு நெடுங்கேணியைச் சேர்ந்த சதீஸ்வரன் டிலக்சி ஆரம்ப கல்வியை வ/ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கற்று தற்போது வ/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் விஞ்ஞான பிரிவில் உயர்கல்வியை தொடர்கிறார்.

இவரின் வறுமை நிலையினை அறிந்து, ஆசிரியர் ஒருவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் வெளிச்சம் அறக்கட்டளையினால் ஓர் அன்பரின் நிதி உதவியுடன் துவிச்சக்கர வண்டியும் சிறு தொகை பணமும் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி. பா. கமலேஸ்வரி , ஆசிரிய ஆலோசகர் திருமதி. S.பஞ்சாட்சர சர்மா , வவுனியா NDB வங்கி கிளை முகாமையாளர் திரு. M .ரூபேந்திரன் மற்றும் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா. லம்போதரன், செயலாளர் திரு. தி.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 5 =

*