;
Athirady Tamil News

அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம் – ஸ்ட்ரெச்சர் இல்லாததால் பெண் தரையில் இழுத்து வரப்பட்ட பரிதாபம்..!!

0

இந்தியாவில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைவரிடமும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் பல நோயாளிகளை அவர்களது உறவினர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் கால் முறிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை முடிவுற்ற நிலையில் வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். உடனே அவர் இடுப்பில் பெட்ஷீட்டை கட்டி தரையில் தரதரவென இழுத்து கொண்டு சென்றனர். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என புகார் அளித்துள்ளனர். ஆனால் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − three =

*