;
Athirady Tamil News

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது! வடக்கு விவசாய அமைச்சர்..!!

0

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது!வடக்கு விவசாய அமைச்சர்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, தாண்டிக்குளம் அரச விதை உற்பத்தி பண்ணையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவரால் குறித்த விவசாய பண்ணையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் மோசடிகள் இடம்பெற்றதாக ஊடகம் ஒன்றின் மூலம் அறிய முடிந்தது. இதனையடுத்து இது தொடர்பில் கணக்காய்வு செய்யுமாறு எமது திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணைகள் முடிவடைந்த பின்னரே மோசடிகள் இடம்பெற்றதா எனவும் அடுத்த கட்டம் குறித்தும் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*