;
Athirady Tamil News

மூளையின் முக்கால் பகுதி என வர்ணிக்கப்படும் வடமராட்சியினருக்கு, கரவெட்டி தவிசாளர் வகுப்பு எடுக்கப்பார்க்கிறார்..!!

0

கரவெட்டி பிரதேச சபை அமர்வில் கரவெட்டி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்கள் பிரதேச மக்களின் தேவை கருதிய பல்வேறு பிரைச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை இம்முறை இடம்பெற்ற சபை அமர்வின் பொழுது முன்வைத்திருந்தார்.

குறிப்பாக மீன் சந்தை அபிவிருத்தி,சட்டவிரோத கட்டிடம்,சொகுசு வாகன கொள்வனவு,ஆளுமை இன்றிய தவிசாளர் பதவி விலக வேண்டும்.என குற்றம் சாட்டி இம்முறை இடம்பெற்ற சபை அமர்வில் கருத்துக்களை காரசாரமான முறையில் முன்வைத்திருந்தார்.மக்கள் நலன் சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஆளுமை இல்லாதவர்களின் செயற்பாடுகளால் உணர்ச்சிவசப்படுவது உண்மையின் வெளிப்பாடு

யாழ் மாவட்டத்தின் மூளையின் முக்கால் பகுதியாக கருதப்படும் வடமராட்சி கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஆளுமை இன்றியவராக இருப்பதுடன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல செயற்பாடுகளின் வெளிப்பாடு காணப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சதாசிவம் இராமநாதன் அவர்கள்.

மக்களின் சொத்தை கொள்ளையடிக்காதீர்கள் என கூறியே நாடகமாடுவதாகவும் தமிழ் மக்களாகிய நாம் ஏழைகளாக இருந்தாலும் எமது பிள்ளைகளுக்கு பரம்பரை பரம்பரையாக நல்ல பண்பாடான பழக்க வழக்கங்களையே காட்டி வருவதாகவும் பிரதேச சுற்றுநிரூபத்திர்க்கு அமைய சொல்பதங்களை உபயோகிக்க தெரியாத உமக்கு வகுப்பு எடுக்கு தராதரம் அற்றவராகவும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்

சட்டவிரோதமாக அமையப்பெற்றிருக்கும் கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எமது சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் நகரமயமாக்கலின் மூலம் அவற்றை உள்வாங்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன எனவும் கேள்வி எளுப்பியுள்ளார் சபையை உரிய முறைமையில் நடத்த முடியாதென்றால் தமிழ் மக்கள் முன்னணியின் இளைப்பாறிய அரச உத்தியோகத்தர் கௌரவ இளங்கோ அவர்கள் சபையின் தவிசாளராக தமது ஆதரவை வழங்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அவர்கள் சையிக்கிளில் சென்றாவது நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.தான் கஷ்டப்படுவதாக அடிக்கடி முனுமுனுக்கும் தவிசாளரின் எதிர்பார்ப்பு என்ன என மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.மக்கள் சேவையை முன்னெடுக்க சொகுசு வாகனம் தேவை என அடை மழையில் நனைந்தவராக காணப்படுவதாகவும் பதின் மூன்று கோடி ரூபா பணம் வைப்பிலிருப்பதாகவும் அதிலிருந்து பணத்தை பெறுவதற்கான பத்திரங்களை தயாரித்துள்ளதாகவும் இதுவே மக்களின் பணத்தை பகலில் கொள்ளை அடிப்பதற்கான வெளிப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 15 =

*