;
Athirady Tamil News

மக்கள் சேவை மாமணிக்கு வவுனியாவில் சேவை நலன் பாராட்டு விழா..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் 32 வருடங்கள் சேவையாற்றி இதில் 22 வருடங்கள் தொடர்ந்து தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா இன்று (30) வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

சமாசங்களின் தலைவர் அ. ச.பாரதிஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் யெகசோதிநாதன், சிக்கனகடனுதவு சமாசங்களின் செயலாளர் சுரேஸ், கால்நடை வளர்ப்பாளர் சங்க தலைவர் க.கந்தசாமி ,பிரதேசபை உறுப்பினர் சி.சுப்பிரமணியம்,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.சிறிநிவாசன்,மற்றும் பொது அமைப்புகளை சார்ந்தோர் என பலர் கலந்துகொண்டனர்.

கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.நிகழ்வில் மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராசாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் அழிக்கப்பட்டதுடன் அவரது சேவைகள் தொடர்பான தொகுப்புகள் அடங்கிய குறிப்பேடு ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 4 =

*