;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவ புதிய அமைப்பு உதயம்.!!

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவும் அமைப்பு இன்று தொடங்கிவைக்கப்பட்டது. நவோதய மக்கள் முன்னணி இந்த அமைப்பைத் தொடங்கி வைத்துள்ளது.

இந்த புதிய அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) கொழும்பிலுள்ள நவோதய அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவும் அமைப்பானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பொருளாதார முன்னேற்றங்களுக்காக அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணா, அரசியல் செயற்குழுத் தலைவர் வேலணை வேணியன், நவோதய அமைப்புக்களின் பொதுச் செயலாளர் சந்திரன் இளையதம்பி, நவோதய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ரவி பிரகாஷ், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பின் தலைவர் வீரசிங்கம் ஜெய சங்கர் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 16 =

*