;
Athirady Tamil News

இலங்கை மின்சார சபைக்கு 4923 மில்லியன் ரூபாய் நஷ்டம்..!!

0

கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை மின்சார சபை 4 ஆயிரத்து 923 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு 1,449 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், அதன் தாக்கம் இந்த ஆண்டு 240 விகிதமாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் உற்பத்தி செலவில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சு, இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டின் நிர்வாக செலவீனம் மட்டும் 27 ஆயிரத்து 296 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*