;
Athirady Tamil News

தமிழ் பிரதேசத்தில் சிங்கள வரவேற்புப் பலகை: மாவட்டச் செயலாளருக்கு கடிதம்..!!

0

திருகோணமலை – பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் அத்துமீறி நிறுவப்பட்டுள்ள வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை இன்று (சனிக்கிழமை) அனுப்பியுள்ளார்.

குறித்த பிரதேசமானது குச்சவெளி பிரதேசசபைக்குச் சொந்தமானது. இந்த நிலையில் இந்த வரவேற்புப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கையானது தென்னவன் மரபு அடி மக்களுக்குச் சொந்தமான காணிகளை அத்துமீறிக் கையகப்படுத்தும் மறைமுக நடவடிக்கையின் முதற்படியென சந்தேகிப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த செயலானது தமிழ்த் தேசத்தில் ஒரு உள்ளுராட்சி சபைக்குரிய இடத்தில் மற்றொரு உள்ளுராட்சி சபை தனது வரவேற்புப் பலகையை அமைத்துள்ள முதல் நிகழ்வாகும்.

எனவே உடனடியாக இதனை அகற்ற மாவட்ட செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதக்கவும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + fifteen =

*