;
Athirady Tamil News

ஆண்களை கொன்று ரத்தத்தை சுவைத்த மோசமான கொலைகாரி..!!

0

உலகையே நடுநடுங்க செய்த பிரித்தானியாவை சேர்ந்த Joanna Dennehy தான், உலகின் மோசமான பெண் கொலைகாரி என பிரபல எழுத்தாளர் Christopher Berry-Dee தான் எழுதியுள்ள புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்..

பிரித்தானியாவில் குற்றவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பதவி வகித்து வரும் Christopher Berry-Dee, சமீபத்தில் தான் எழுதியுள்ள புதிய புத்தகத்தில், மோசமான பெண் கொலைகாரிகள் என கருதப்பட்ட Rosemary West மற்றும் Aileen Wuornos போன்றவர்களை விட மோசமானவள் Joanna Dennehy தான் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில், Rosemary தன்னுடைய கணவர் West உதவியுடன் மட்டுமே 12 இளம்பெண்களை கொலை செய்தார். அதேபோன்று Aileen Wuornos துப்பாக்கி உதவியுடன் தான் 7 ஆண்களை சுட்டுக்கொலை செய்தார்

ஆனால் இவர்கள் இருவரையும் மிஞ்சும் அளவிற்கு Joanna, 3 அங்குல பூட்டு மற்றும் கத்தியை கொண்டே 10 நாட்களில் 3 ஆண்களை, யாருடைய துணையும் இன்றி கொலை செய்துள்ளார்.

அவள் கொலை செய்வதற்கு முன்பு, ஆண்களின் கைகளை கட்டி சரமாரியக கத்தியால் குத்தி அவர்களின் ரத்தத்தை சுவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக Joanna கடந்த 2013-ம் ஆண்டு, பிரித்தானியாவின் Peterborough நகரில் உள்ள பாதாள சாக்கடையில் 3 ஆண்களை கொலை செய்து தூக்கி வீசியதோடு, பொலிஸாருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே 2 பேரை கொடூரமாக தாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*