;
Athirady Tamil News

அபூர்வமான பாண்டா கரடி கண்டுபிடிப்பு..!!

0

சீனாவில் அபூர்வமான பழுப்பு நிற பாண்டா கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் தேசிய விலங்கு பாண்டா கரடி. இது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இதுவரை காணப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஷான்ஷி மாகாணத்தில் உள்ள மூங்கில் காடுகளில் பழுப்பு நிற பாண்டா கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வெள்ளை நிறத்துடன், கருப்புக்கு பதிலாக பழுப்பு நிறத்தில் உள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஷான்ஷி வனப்பகுதியில் முதன் முறையாக இந்த கரடி பார்க்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ வகை பாண்டாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 20 =

*