;
Athirady Tamil News

பார்ப்போரை கண்ணீர் வர வைக்கும் நாயின் வேதனை: வீட்டு உரிமையாளர் செய்த அதிர்ச்சி செயல்..!!

0

கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த நாயை கண்டு கொள்ளாமல் வீட்டின் உள்ளே உரிமையாளர்கள் இருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்சில் Calabarzon மாகாணத்தின் Lucena பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று வீட்டிற்கு வெளியே வெயிலில் நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளது.

அந்த வழியே சென்ற பெண் ஒருவர் நாய் படும் வேதனையை பார்க்க முடியாமல் வீட்டின் உரிமையாளரை வெளியில் நின்று கத்தியுள்ளார்

ஆனால் வீட்டின் உரிமையாளர் அதை காதில் வாங்காமல், இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் அந்த பெண் வீட்டின் உரிமையாளரை நம்பினால் ஒன்றும் ஆகாது என்று கருதி தானாக ஒரு சீட்டை எடுத்து நாயின் அருகில் நிழலாக விழும் படி வைத்து, அதன் பின் வாலி மற்றும் தண்ணீரை அதன் மீது தெளித்துள்ளார்.

இருப்பினும் அந்த நாய் வெயிலின் தாக்கத்தினால் மிகவும் சோர்வடைந்துள்ளது

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.அதில் நாய் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த நாய் வெயிலில் சரியாக நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் கடும் வேதனையை சந்தித்துள்ளது.

பார்ப்போரையும் கண்ணீர் வரவைக்கும் இந்த வீடியோ தற்போது வரை 6 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*