;
Athirady Tamil News

மகாராணியாக பயிற்சி பெறும் குட்டி இளவரசி சார்லட்..!!

0

பொதுமக்கள் முன்பு தைரியமாக போஸ் கொடுப்பதில் பேர் பெற்றவர் குட்டி இளவரசி சார்லட். அதை அவர் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

தனது குட்டித் தம்பி பிறந்த நேரத்தில் அவனைக் காண்பதற்காக மருத்துவமனைக்கு சென்றபோது மறவாமல் பொதுமக்களைப் பார்த்து கையசைத்த வீடியோவை யாரும் மறந்திருக்க முடியாது.

அதேபோல் மகாராணியுடன் பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் நிற்கும்போதும் ராணியாரைப் போலவே அவர் கையசைத்த வீடியோ பிரபலமானது.

அதேபோல் தனது சித்தப்பா ஹரியின் திருமணத்தின்போதும் அவர் அவர்களை பார்த்து கையசைத்ததையும் வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் தவறவில்லை

தற்போது கெனிங்டன் மாளிகைக்கு வந்து விட்டு திரும்பும் இளவரசர் சார்லசும் அவரது மனைவியும் சார்லட்டைப் பார்த்து கையசைக்க, அவள் பதிலுக்கு கையசைக்கும் வீடியோ ஒன்று வெளியானதையடுத்து இந்த சம்பவங்களை பத்திரிகையாளர்கள் நினைவு கூர்ந்ததோடு, குட்டி இளவரசி ராணியாவதற்காக இப்போதே பயிற்சி எடுக்கிறார் என்றும் செல்லமாக விமர்சித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*