;
Athirady Tamil News

பிரித்தானியாவில் கோர சம்பவம்: மனவளர்ச்சி குன்றிய மகனை பட்டினியிட்டு சாகடித்த கொடூர தாயார்..!!

0

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் தாயார் உள்ளிட்ட 3 பெண்கள் இணைந்து மன வளர்ச்சி குன்றிய 18 வயது இளைஞனை பட்டினியிட்டு கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லீட்ஸ் நகரில் உள்ள Farnley பகுதியில் குடியிருந்து வரும் 45 வயது Dawn Cranston என்பவரே மனவளர்ச்சி குன்றிய தமது 18 வயது மகனை பட்டினியிட்டு சாகடித்த தாயார்.

குறித்த சம்பவம் வெலியான நிலையில் மருத்துவ உதவிக்குழுக்கள் அந்த குடியிருப்பில் சென்று பட்டினியால் மரணமடைந்த Jordan Burling என்ற 18 வயது இளைஞரின் சடலத்தை மீட்கும் போது அவரது உடல் எடை சுமார் 38 கிலோ அளவுக்கே இருந்துள்ளது.

மிகவும் அருவருப்பான ஒரு போர்வையில் படுத்திருந்த ஜோர்டானின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.

ஊட்டச்சத்தின்மை, வெளிச்சம் புகாத அறை மட்டுமின்றி காயங்களில் பராமரிப்பு இல்லாமை என மிக மோசமான நிலையில் அந்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.

உலக யுத்த காலத்தில் சிறை கைதிகளின் நிலயைவிடவும் மிகவும் அருவருப்பான நிலையில் அந்த இளைஞர் காணப்பட்டதாக மருத்துவக் குழு அதிர்ச்சியுடன் நினைவு கூற்ந்துள்ளது.

ஆனால் தமது மகனின் மரணத்திற்கு தாம் காரணம் அல்ல என அவரது தாயார் Dawn Cranston மட்டுமின்றி, சகோதரியும், பாட்டியும் மறுத்துள்ளனர்

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு, அந்த குடியிருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றின் சடலமும் சிக்கியுள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து பிறந்ததாகவும், ஆனால் சில சூழல்களால் மறைவு செய்ய முடியவில்லை என Dawn Cranston தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமது மகனை தாம் நல்ல நிலையிலேயே பராமரித்து வந்ததாக கூறும் Dawn Cranston தமது மகனை கொலை செய்யும் அளவுக்கு தமக்கு துணிச்சல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Dawn Cranston குடும்பத்தினரின் மர்மமான நடவடிக்கை காரணமாக அக்கம்பக்கத்தினரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + six =

*