;
Athirady Tamil News

இளம்பெண்ணை மிரட்டி 40 முறை துஷ்பிரோயகம் செய்த சுவிஸ் நபர்: வெளியான பகீர் சம்பவம்..!!

0

சுவிட்சர்லாந்தில் காதல் வலையில் விழ வைத்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த நபர் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வரும் வட ஆப்பிரிக்க இளம்பெண் ஒருவர் மீது சுவிஸ் நபர் காதல் வயப்பட்டுள்ளார்.

சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.அதன் பின்னரே தமது வாழ்க்கையில் நரக வேதனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது மனைவி என்றும் பாராமல் அந்த நபர் தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளார்

வாரத்தில் 4 முறை கூட பாலியல் உறவுக்கு நிர்பந்தித்த நாட்களும் உண்டு எனக் கூறும் அவர், அவருடன் இருந்த அந்த குறுகிய காலகட்டத்தில் சுமார் 40 முறை வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + seven =

*