;
Athirady Tamil News

ஜேர்மன் மேசைப்பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!!

0

ஜேர்மனியில் உணவகங்கள், பார்களில் மேசைப்பணியாளர்களாக பணியாற்றுபவர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேசைப்பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என முதலாளிகள் சங்கங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது மேசைப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் (Waiter) ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு €8.84 யூரோ ஆகும். தற்போது இந்த ஊதியம் ஒரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது

வரும் 2019 ஆம் ஆண்டில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரு மணிநேரத்திற்கு €9.19 யூரோ ஊதியம் வழங்கப்படும். 2020 ஆம் ஆண்டில் மீண்டும் €9.35 யூரோவாக ஊதிய உயர்வு செய்யப்படும் என தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளது.

பணியாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார போட்டித்தன்மை போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*