;
Athirady Tamil News

இரண்டாவது முறையாக காலிறுதி வாய்ப்பு…. குரேஷியா – டென்மார்க் இன்று மோதுகின்றன..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குரேஷியா, டென்மார்க் மோதுகின்றன. இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் உள்ளன. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன. நாக்அவுட் துவக்கம் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று துவங்கின. நேற்று நடந்த ஆட்டங்களில் அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே ஆகியவை காலிறுதிக்கு முன்னேறின. இரண்டாவது நாளான இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க்கை சந்திக்கிறது போர்ச்சுகல்.

இரு அணிகளும் இதுவரை 5 முறை சந்தித்துள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2ல் வென்றுள்ளன. ஒன்று டிராவானது. உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்திக்க உள்ளன. 2014ல் எப்படி கடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்றில் ஒன்றில் வெற்றி, 2ல் தோல்வியுடன் குரேஷியா முதல் சுற்றுடன் வெளியேறியது. கடந்த உலகக் கோப்பையில் டென்மார்க் விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா மூன்று ஆட்டங்களிலும் வென்றது. நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. சி பிரிவில் இடம் பெற்றிருந்த டென்மார்க் ஒரு வெற்றி, 2 டிரா பெற்றது. பெருவை 1-0 என வென்றது.

ஆஸ்திரேலியாவுடன் 1-1, பிரான்ஸ் உடன் 0-0 என டிரா செய்தது. காலிறுதிக்கு நுழைவது யார் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்று நான்காவது முறையாக டென்மார்க் நாக் அவுட் முன்னேறியுள்ளது. இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. 1998ல் காலிறுதியில் அது விளையாடியது. குரேஷியாவும் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. 1998ல் அரை இறுதி நுழைந்த குரேஷியா இரண்டாவது முறையாக காலிறுதிக்கு நுழையத் தயராக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வரும் குரேஷியாவுக்கே காலிறுதி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*