;
Athirady Tamil News

குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு..!! (படங்கள்)

0

இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் உள்ள கல்லென விகாரையின் குகைக்குள் உள்ள வீட்டில் இருந்து எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து நேற்று இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எலும்புக்கூட்டின் மீது பிக்குகளின் ஆடையொன்று இருந்துள்ளதுடன் குறித்த வீட்டில் பிக்கு ஒருவர் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு வந்த இரத்தினபுரி நீதிமன்ற வைத்தியர் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு எலும்புக்கூடு இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மற்றும் கஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + two =

*