;
Athirady Tamil News

ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்பு வெற்றி பெறு­வது கடினம் – அமெ­ரிக்க தூதுவர் கருத்து..!!

0

ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்­கான அழுத்­தங்­களை தொடர்ந்து முன்­னெ­டுக்கும்.

அந்தப் பொறுப்­பி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­காது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்­பினர் வெற்­றி­பெ­று­வது கடி­ன­மான காரி­ய­மாகும் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தினம் மாலை அமெ­ரிக்கத் தூதுவர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ யி­ருந்தார்.

இந்தச் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வ­ராக பதவி வகித்­து­வரும் அதுல் கெசாப் அடுத்த மாதம் இலங்­கை­யி­லி­ருந்து தனது நாட்­டுக்கு திரும்­பு­கின்றார்.

பத­விக்காலம் முடி­வ­டைந்து வாஷிங்டன் செல்லும் அவர் அர­சாங்கத் தலை­வர்­க­ளையும் எதிர்க்­கட்சித் தலை­வர்­க­ளையும் சந்­தித்து பிரி­யா­விடை பெற்று வரு­கின்றார். இதன் ஒரு அங்­க­மாக நேற்று முன்­தினம் வட­மா­காண முத­ல­மைச்­சரை கொழும்பில் அவர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

இந்த சந்­திப்­பின்­போது இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­யினை நடத்­தக்­கோரும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ரணை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கவலை தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­மை­யினால் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அழுத்­தங்கள் குறை­வ­டைந்­து­விடும் என்ற தனது அச்­சத்­தையும் முத­ல­மைச்சர் அமெ­ரிக்க தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த தூதுவர் அப்துல் கசாப் ஐ.நா.மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் எம்­முடன் இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது.

இதனால் அந்த பொறுப்­புக்­கூறும் விட­யத்­தி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் நழு­வி­விட முடி­யாது. இதற்­கான அழுத்­தங்­களை தொடர்ந்தும் அமெ­ரிக்கா முன்­வைக்கும்.

அர­சாங்க உயர்­மட்­டத்­தி­ன­ருக்கு இவ்­வி­டயம் தொடர்பில் நாம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். இதனால் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் நாம் தொடர்ந்தும் அக்­கறை காண்­பிப்போம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த அமெ­ரிக்க தூதுவர், ஜாதி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்பு வெற்­றி­பெ­று­வது கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும்.

மஹிந்த தரப்­பி­னரை முப்­பது வீத­மான மக்­களே ஆத­ரிப்­ப­தாகத் தெரி­கின்­றது. ஏதோ ஒரு கார­ணத்­துக்­காக ஏனைய மக்கள் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவே உள்­ளனர். அதற்குப் பல கார­ணங்கள் இருக்­கலாம் என்று கூறி­யுள்ளார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ அமெ­ரிக்க பிரஜை என்­ப­தனால் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தாயின் அமெ­ரிக்க பிரஜா உரி­மையை நீக்­கு­வதில் ஏதேனும் சிக்­கல்­களை எதிர்­நோக்க வேண்டி வருமா என்று முத­ல­மைச்சர் அமெ­ரிக்க தூது­வ­ரிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இதற்குப் பதி­ல­ளித்த அதுல் கெசாப் அமெ­ரிக்க பிர­ஜை­யா­க­வுள்ள ஒருவர் அந்தப் பிர­ஜா­உ­ரி­மையை இரத்துச் செய்­ய­வேண்­டு­மானால் அதற்­கான சட்­ட­திட்­டங்கள் உள்­ளன. அவ்­வா­றான நிலையில் அந்த சட்­ட­திட்­டங்­களில் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் தலை­யிட முடியும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சிறு­பான்­மை­இன மக்கள் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த அதுல் கெசாப், சிறு­பான்­மை­இன மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான வலி­யு­றுத்­தல்­களை விடுக்க வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்­மை­இன மக்­களின் பங்­க­ளிப்பு என்­பது பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கு அவ­சி­ய­மா­ன­தா­கவே இருக்­கின்­றது. எனவே இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களை உரிய வகையில் சிறு­பான்மை இன மக்கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்று கூறி­யு­ளள்ளார்.

ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்து வருகின்றன.

இவர் மஹிந்த தரப்பைப்போன்று கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுகின்றார். யதார்த்தபூர்வமான முறையில் ஜனாதிபதி செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அந்த வழியில் செல்வதற்கு அவர் விரும்புகின்றாரில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*