;
Athirady Tamil News

காலிறுதிக்கு முன்னேறுமா…. ஸ்பெயினை சந்திக்கிறது திடீர் ஹீரோ ரஷ்யா..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சந்திக்கிறது ரஷ்யா. திடீர் ஹீரோவாகியுள்ள ரஷ்யா, முதல் முறையாக காலிறுதிக்கு நுழையும் முயற்சியில் உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன. நாக்அவுட் துவக்கம் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று துவங்கின.

நேற்று நடந்த ஆட்டங்களில் அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே ஆகியவை காலிறுதிக்கு முன்னேறின. இரண்டாவது நாளான இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சந்திக்கிறது ரஷ்யா. இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க்கை சந்திக்கிறது குரேஷியா. 2014ல் எப்படி கடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்றில் 2 டிரா செய்து முதல் சுற்றுடன் ரஷ்யா வெளியேறியது.

ஸ்பெயின் 3ல் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா 3ல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று அசத்தியது. அடுத்தது சலாவின் எகிப்தை 3-1 என்று வென்றது. உருகுவேயிடம் 3-0 என தோல்வியடைந்தது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் 3ல் ஒரு வெற்றி, 2 டிரா பெற்றது.

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் போர்ச்சுக்கல்லுடன் 3-3 என டிரா செய்தது. ஈரானை 1-0 என்று வென்றது. மொராக்கோவுடன் 2-2 என டிரா செய்தது. காலிறுதிக்கு நுழைவது யார் 15வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ஸ்பெயின் 2010ல் கோப்பையை வென்றது. அதே நேரத்தில் ரஷ்யா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. புள்ளிவிவரங்கள் ஸ்பெயினுக்கு சாதகமாக இருந்தாலும், ரஷ்யா திடீர் ஹீரோவாகி உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாகும். 1986ல் யுஎஸ்எஸ்ஆர் காலிறுதிக்கு முன்னேறியது. தனி நாடான பிறகு ரஷ்யா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேற துடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − twelve =

*