;
Athirady Tamil News

பிரான்ஸ் கிராமமக்களை மிரட்டி வரும் மிருகம்: குழந்தைகள் தாக்கப்படலாம் என அச்சம்..!!

0

பிரான்சில் ஒநாய்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளதால், ஏராளமான ஆடுகள் பலியாகியுள்ளதாக கிராமமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

பிரான்சின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் Aveyron மாகாணத்தில் ஆடுகளை ஓநாய்கள் தொடர்ந்து தாக்கி வருவதாக அங்கிருக்கும் கிராமமக்கள் கூறியுள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜான் பால் ஸ்குவட்டர் என்ற விவசாயி கூறுகையில், தினந்தோறும் நான் காலையில் என்னுடைய ஆட்டுமந்தையில் பார்க்கும் போது ஏதேனும் ஒரு ஆடுகள் ஓநாயின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும்

தன்னையே சில நேரங்களில் ஓநாய்கள் தாக்கியுள்ளதாகவும், இப்போது இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையெனில் நாளைடைவில் குழந்தைகள் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.குறைந்தது 10 ஓநாய்களாவது இருக்கும், ஆனால் இது குறித்து அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் இந்த மாகாணத்தில் கடந்த ஆண்டு மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஓநாய்கள் தாக்கியுள்ளது.

உள்ளூர் மேயர் ஒருவர் சமீபத்தில் கூட 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் அப்பகுதி வழியே செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இங்கிருக்கும் கிராமமக்களின் கோரிக்கையே ஓநாய்களிடமிருந்து ஆடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 16 =

*