;
Athirady Tamil News

9ஆயிரம் மைல்கள் தாண்டி பெண் தோழியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்..!!

0

நியூஸிலாந்திலிருந்து 9 ஆயிரம் மைல்கள் தாண்டி அமெரிக்காவில் உள்ள பெண் தோழியை பார்க்க சென்றவர் மீது பெண்ணின் தாயார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.

நியூசிலாந்தை சேர்ந்த Troy Skinner (25) இளைஞருக்கு ஆன்லைன் மூலம் அமெரிக்காவை சேர்ந்த 14 வயதுள்ள பெண் தோழி கிடைத்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் Skinner-உடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்.

இதற்கிடையில் Skinner 9 ஆயிரம் மைல்கள் தாண்டி, அமெரிக்காவில் வசிக்கும் இளம்பெண்ணை பார்ப்பதற்காக, அவரது வீட்டிற்கு சென்றடைந்துள்ளார்.

ஆனால் அங்கு இளம்பெண்ணின் அம்மா வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து Skinner வீட்டின் அடித்தளத்தின் வழியாக நுழைய முற்பட்டுள்ளார்.

தனது கையில் துப்பாக்கி இருப்பதாகவும், காவல்துறைக்கு தகவல் கொடுப்பேன் எனவும் இளம்பெண்ணின் தயார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த Skinner வீட்டின் கண்ணடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டுள்ளார்.

இரண்டு மகள்களுடன் பயத்தில் உறைந்திருந்த இளம்பெண்ணின் தாய் உடனடியாக பதற்றத்தில், Skinner-ஐ நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் Skinner-ன் கழுத்து பகுதியில் ஒரு குண்டு பாய்ந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் Skinner-ஐ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவன் கொண்டுவந்திருந்த பொருட்களை ஆராயும்பொழுது, அதில் ஒரு கத்தி, பேப்பர் ஸ்ப்ரே மற்றும் டேப் ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் திட்டமிட்டே Skinner அமெரிக்க வந்துள்ளதாக கருதி அவன் மீதி வழக்கு பதிவு செய்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*