;
Athirady Tamil News

சுவிஸ்ஸில் சிறார்கள் மீதான தாக்குதல்களை புகார் அளிப்பது இனி கட்டாயம்..!!

0

சுவிட்சர்லாந்தில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சிறார்கள் மீதான தாக்குதல் தொடர்பில் புகார் தெரிவிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சிறார்கள் மீதான தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் சிறார்களுடன் தொடர்பில் இருக்கும் தொழில்முறை நபர்கள் அனைவரும் கட்டாயமாக புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது சிறார்களின் பாதுகாப்புக்கு பேருதவியாக அமையும் என்றும் அதே வேளையில் நாட்டின் ஒற்றுமைக்கு உந்துசக்தியாகவும் அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டத்திருத்தமானது ஓவ்வொரு மாகாணத்திற்கும் ஏற்றவாறு மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி சமூக பணியாளர்களும் ஆசிரியர்களும் மட்டுமே புகார் அளிக்கும்படி இருந்தது.

ஆனால் புதிய சட்டத்திருத்தம்படி சமூகத்தின் அனைத்து பிரிவினரும், சிறார்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அனைத்து தொழில்முறையினரும் புகார் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களும் இந்த சட்டத்தின்படி புகார் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் சிறார்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சுமார் 50,000 புகார்கள் பதியப்படுவதாக தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 9 =

*