;
Athirady Tamil News

பிரான்சில் பொதுமக்கள் மீதான பொலிசாரின் தாக்குதல் சம்பவம் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்..!!

0

பிரான்சில் பொதுமக்கள் மீது பொலிசாரின் துப்பாக்கிச் சூடு சம்பவம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதுடன் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டதில்லை.

பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கருதிய பிரான்ஸ் காவல்துறை முதன்முறையாக இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் கொல்லப்பட்ட 14 பேரில் பயங்கரவாதிகளும் அடக்கம் என கூறியுள்ள காவல்துறை, கடந்த ஓராண்டில் மட்டும் பொலிசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் 54 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 394 முறை பொலிசார் தங்கள் அதிகாரப்பூர்வ ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கைத்துப்பாக்கியையே பயன்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி கடந்த 2017 ஆம் ஆண்டு கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 574 எனவும், கடந்த 2016 ஆம் ஆண்டு இது 543 என இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + nine =

*