;
Athirady Tamil News

கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது இதுதொடர்பான ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிசார் கைது செய்தனர்.

பொலிசாரினால் கைது செய்தவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சி பளை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கில் புதையல் தோண்டுவதற்காக பல லட்சம் பெறுமதியான கருவிகளுடன் புதையல் தோண்டுவதற்கு முயற்சிக்கும் நிலையில் கைது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெறுமதிமிக்க கருவிகளை யார் வழங்குகிறார்கள் இதற்கு யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது.

இதுவரைக்கும் கிளிநொச்சியில் மட்டும் 3 புதையல் தேடும் கருவிகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீட்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*