;
Athirady Tamil News

10ஆவது ஆண்டு நினைவு நாள்..!!

0

கொழும்பு மாளிகாவத்தையை பிறப்பிடம்
வசிப்பிடமாக கொண்ட பரமேஸ்வரன் சுதன் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள்

Birth : 1990.01.05
Death : 2008.06.22
திதி: 2018.07.02

விண்மீன்கள் எட்டிப்பிடிக்க
என் தோள் ஏறி
வானைத்தொட வந்த
என் பாதியே

உன் தோழனாய்
உன்னோடு கதைபேச
தினமும் காத்திருக்கிறேன்
வாசல் படியிலே

வண்ணம் கொண்ட உலகில்
என் எண்ணங்களின் சாயங்கள்
வெறுமையாய் போய் வருடங்கள் பல
கலையவில்லை உன் நினைவுகள்
மறையவில்லை உன் பூ முகம்
சத்தமிட்டு சமரசமாய்
உரிமை கொண்டாட
நீயின்றித் தவிக்கின்றேன்

தந்தை என் கனவுகள் கேளாமலே
காற்றோடு கரைந்து விட்டாய்
மீண்டும்
என் மகனாய் வந்துவிடு
மறுஜென்மத்திலும்
குறும்பா நீ தான்
எம் உலகம்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*