;
Athirady Tamil News

பெல்ஜியத்துடன் இன்று சந்திப்பு…. ஃபேர் பிளே ஜப்பான் காலிறுதி முன்னேறுமா..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெல்ஜியத்தை சந்திக்கிறது ஜப்பான். பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக காலிறுதிக்கு நுழைவதற்கு ஜப்பான் தீவிரமாக உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முன்னேறின நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.

போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று காலிறுதி நுழைந்தது ரஷ்யா. மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 3-2 என பெனால்டி ஷூட்டில் டென்மார்க்கை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த பெல்ஜியம் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்து 1-0 என வென்றது. எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா செய்தது. கொலம்பியாவை 2-1 என வென்றது.

செனகலுடன் 2-2 என டிரா செய்தது. போலந்திடம் 1-0 என தோல்வியடைந்தது. கடைசியில் ஃபேர் பிளே அடிப்படையில் செனகலை பின்னுக்கு தள்ளி முன்னேறியது ஜப்பான். மிரட்டிய பெல்ஜியம் தற்போது 13வது உலகக் கோப்பைகளில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. கடந்த உலகக் கோப்பையிலும் பிரிவுச் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. காலிறுதியில் அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வியடைந்தது.

தொடர்ந்து ஆறாவது உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜப்பான் முதல் முறையாக காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது. லுகாகுவை சமாளிக்குமா இந்த உலகக் கோப்பையில் லீக் பிரிவில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தோரில் ரொனால்டோவுடன், பெல்ஜியத்தின் ரொமேலு லுகாகு 4 கோல்களுடன் 2வது இடத்தில் உள்ளார். தங்க கால்பந்தை வெல்வதற்கான போட்டியில் அவர் உள்ளார். இந்த நிலையில் பெல்ஜியத்துக்கு ஏதாவது அதிர்ச்சி அளித்தால் மட்டுமே ஜப்பான் காலிறுதிக்கு நுழைய முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + fourteen =

*