;
Athirady Tamil News

குளியாப்பிட்டியவில் கைக்குண்டு தாக்குதல்..!!

0

குளியாப்பிட்டிய, பொயிங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (01) இரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவருக்கும் அந்த வீட்டில் வசிக்கும் இளைய மகனுக்கும் இடையில் பல காலமாக இருந்த பகையின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இருப்பதுடன் அவர்கள் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் நேற்று இரவு திருமண நிகழ்வொன்றிற்கு சென்று போதையில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் சில வருடங்கள் முன் இராணுவத்தில் இருந்து பொது மன்னிப்பு அடிப்படையில் சேவையில் இருந்து விலகி சென்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*