;
Athirady Tamil News

மன்னாரில் ரெஜினாவின் படுகொலையை கண்டித்து அமைதி வழி பேரணி..!!

0

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து மன்னாரில் அமைதி வழி பேரணியொன்று நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த பேரணி மன்னார், முருங்கள் பேருந்து தரிப்பிடத்தில் நாளை காலை 9 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் குறித்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் இதன்போது மன்னார் மாவட்டம் முழுவதும் கடையடைப்பை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் 6 வயது பாடசாலை சிறுமியொருவர் கடத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாளை மன்னாரிலும் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்காக அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*