;
Athirady Tamil News

25 ஆவது நாளாக மனித எச்சங்கள் அகற்றும் பணிகள் மன்னாரில் முன்னெடுப்பு..!!

0

மன்னார் நகர நுழைவாயிலுள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள், 25 ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இவர்களுடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அகழ்வு பணிகளின்போது கிடைக்கப்பெற்ற சில மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றமையினால் அவைகளை அப்புறப்படுத்தாமல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் ஏற்கனவே கிடைத்த மனித எச்சங்கள் சிதைவடைய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் இதுவரை கிடைத்த அனைத்து மனித எச்சங்களையும் அப்புறபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்

மேலும் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகற்றப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு பின்னர் முழு அகழ்வு பணிகளும் நிறைவடைந்த பின்னர் உடற் கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வளாகத்தை அகலப்படுத்தி அகழ்வு செய்வதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வளாகத்தின் முகப்பு பகுதியிலும் முழு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*