;
Athirady Tamil News

வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்- விஜயகலா..!! (வீடியோ)

0

இன்றைய நிலையில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்கள் ஜனாதிபதியை தலையால் நடந்து ஜனாதிபதி ஆக்கினோம்.

ஆனால் அவர் இன்று கட்சியை வளர்க்கின்றாரே அன்றி எமது மக்களை காப்பற்றுகின்றார் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை இப்போது ஒவ்வொரு வரும் உணர்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*