;
Athirady Tamil News

போலி என்கவுண்டர்கள் – உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் போலி என்கவுண்டர்கள் நடத்தப்படுவதாக என்.ஜி.ஓ மற்றும் சிவில் சுதந்திரத்துக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான சஞ்சய் பாரிக், சமீப காலங்களில் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலி என்கவுண்டர்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*