;
Athirady Tamil News

போதையில் நீதிபதி இருக்கையில் அமர்ந்து செல்பி – பயிற்சி காவலர் கைது..!!

0

மத்தியப்பிரதேசம் மாநிலம், உமரியா மாவட்டத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று வருபவர் ராம் அவ்தார் ராவத்(28).

கடந்த சனிக்கிழமை உமரியா மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்ற அவர், காலியாக இருந்த தலைமை நீதிபதியின் அறைக்கு சென்றார். போதையில் இருந்த ராம் அவதார், நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து தனது கைபேசியால் மளமளவென செல்பி போட்டோக்களை வெவ்வேறு கோணங்களில் எடுத்து தள்ளினார்.

இதை கண்ட நீதிபதியின் குமாஸ்தா உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க விரைந்துவந்த கோத்வாலி காவல் நிலைய போலீசார் ராம் அவ்தார் ராவத்தை கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 12 =

*