;
Athirady Tamil News

டிரையத்தலான் இரும்பு மனிதர் பட்டத்தை வென்றார் இந்திய ராணுவ தளபதி டோக்ரா..!!

0

ஆஸ்திரியா நாட்டில் ஆண்டுதோறும் ‘அயர்ன் மேன் ஆஸ்திரியா’ என்னும் இரும்பு மனிதர் பட்டத்துக்கான டிரையத்தலான் போட்டி நடைபெறும்.

3.8 கிலோமீட்டர் தூர நீச்சல், 180 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் முழு மாரத்தான் என்றழைக்கப்படும் 42.2 கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயம் என மூன்று வகைகளை கொண்ட இந்த டிரையத்தலான் போட்டியை தொடர்ந்து 17 மணி நேரத்துக்குள் முடிக்கும் முதல் நபருக்கு ‘அயர்ன்மேன்’ எனப்படும் இரும்பு மனிதர் பட்டம் அளிக்கப்படும்.

இவ்வகையில், ஆஸ்திரியா நாட்டின் கிளாகென்பர்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆண்டுக்கான டிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டியில் சுமார் 3 ஆயிரம் பங்கேற்றனர்.

இந்த போட்டிக்கான 3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுதல் 42.2 கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயம் என அனைத்தையும் 14 மணி நேரத்துக்குள் முடித்த இந்திய ராணுவ தளபதி வி.டி.டோக்ரா ‘அயர்ன்மேன் டிரையத்தலான்’ பட்டத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சமீபகாலமாக பணி நேரத்துக்கு பின்னர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ள டோக்ரா, உலக நாடுகளிலேயே இந்த பட்டத்தை வென்ற முதல் ராணுவ தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + seventeen =

*