;
Athirady Tamil News

நிர்க்கதியான லாரி டிரைவர் குடும்பத்துக்கு சம்பளத்தை வழங்கும் பெண் போலீஸ்..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர் எஸ் புரா பகுதியில் உள்ள புளோரா கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் மான்சிங். லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மான்சிங் டெல்லியில் இருந்து காஷ்மீர் நோக்கி லாரியில் வந்து கொண்டிருந்தார். ஜகல்புரி பகுதியில் வந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமடக்கியது. அவர் வைத்திருந்த பணத்தை பறித்த அந்த கும்பல் அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வழக்கை விசாரித்து வந்த அந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு லாரி டிரைவர் குடும்பத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.

ஒரு நாள் மான்சிங் குடும்பத்தினரிட்ம் பேசிய அஸ்லான் கான் தனது சம்பளத்தில் இருந்து மாதம் ஒரு தொகையை நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார். அரசிடம் இருந்தும் வேண்டிய உதவிகளை பெற்றுத் தருவதாக கூறினார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி முதல் இன்று வரை மான்சிங் குடும்பத்திற்கு தனது சம்பளத்தில் ஒரு பாதியை நிதி உதவியாக வழங்கி வருகிறார். இதனால் மான்சிங்கின் பெண் குழந்தைகள் படிப்பு தடைபடாமல் தொடர்கிறது.

வழிப்பறி கும்பலால் கொல்லப்பட்ட லாரி டிரைவர் குடும்பத்துக்கு பெண் போலீஸ் ஒருவர் நிதி உதவி அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 17 =

*