;
Athirady Tamil News

உலகக் கோப்பையில் 50வது ஆட்டம்…. சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்வீடன் வெற்றி பெறுமா..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து சந்திக்கின்றன. உலகக் கோப்பையில் 50வது ஆட்டத்தில் விளையாடும் ஸ்வீடன் வெற்றி பெற்று காலிறுதி நுழையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முன்னேறின நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது.

நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று காலிறுதி நுழைந்தது ரஷ்யா. மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 3-2 என பெனால்டி ஷூட்டில் டென்மார்க்கை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என மெக்சிகோவை வென்றது. பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 என ஜப்பானை கடைசி விநாடியில் வென்று காலிறுதி நுழைந்தது. இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் எப் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்வீடன் 3ல் 2ல் வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. தென்கொரியாவை 1-0, மெக்சிகோவை 3-0 என வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என தோல்வியடைந்தது.

அதே நேரத்தில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த சுவிட்சர்லாந்து 3ல் ஒரு வெற்றி, 2 டிராவுடன் நாக் அவுட் முன்னேறியது. முதல் ஆட்டத்தில் பிரேசிலுடன் 1-1 என டிரா செய்து அசத்தியது. செர்பியாவை 2-1 என வென்றது. கோஸ்டாரிகாவுடன் 2-2 என அசத்தலாக டிரா செய்தது. ஸ்வீடன் அசத்தல் சாதனை இன்று நடைபெறும் ஆட்டம், உலகக் கோப்பையில் ஸ்வீடனுக்கு 50வது ஆட்டமாகும். 50 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள 11வது அணியாக உள்ளது. இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் மெக்சிகோ மட்டுமே அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ளது. 1958ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்வீடன், 1994ல் மட்டுமே நாக் அவுட் சுற்றை தாண்டியுள்ளது.

கடைசியாக விளையாடிய நான்கு உலகக் கோப்பைகளிலும் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சுவிஸ்க்கு வாய்ப்பு சுவிட்சர்லாந்து 1954க்குப் பிறகு இதுவரை நாக் அவுட் சுற்றில் கோல் அடித்ததில்லை. இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளது சுவிட்சர்லாந்துக்கு பலமாகும். 50வது போட்டியில் விளையாடும் ஸ்வீடனுக்கு எதிராக இந்த ஆட்டத்தில் கோல்களை அடித்தால், கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 9 =

*