;
Athirady Tamil News

வவுனியாவில் கெரோயின் பக்கற்றுக்களை சிறைச்சாலைக்குள் எறிய முற்பட்ட இருவர் கைது..!!

0

வவுனியா சிறைச்சாலை வளாகத்திற்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரு இளைஞர்களை வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்புபிரிவினர் நேற்று (03) கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலைக்கு அருகாமையில் நடமாடிய இருவரை சோதனை செய்த போதே அவர்களின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெறோயின் பக்கற்றுகள் மீட்கபட்டுள்ளது.

ஒருவரிடம் இருந்து 4 பக்கற்றுகளும் மற்றயவரிடம் இருந்து 1 பக்கற்றுமாக மொத்தம் 20 கிராம் கெரோயின் மிட்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவை சேர்ந்தவர்கள் என்றும் சிறைச்சாலைக்கு வெளியில் நின்று சிறைச்சாலை மதிலால் சிறைக்குள் போதைபொருட்களை எறிய முனையும் போது கைது செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யபட்டவர்கள் வவுனியா நீதி மன்றில் ஆயர்படுத்தபடவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போதை தடுப்பு போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + ten =

*