;
Athirady Tamil News

ஆந்திராவில் திருமண கோஷ்டியினர் சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி..!!

0

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், வத்லமுரு பகுதியில் நேற்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ஆட்டோவில் வீடு திரும்பினர். நள்ளிரவில் காக்கிநாடா-ராஜநகரம் சாலையில் சமல்கோட் அருகே வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் சிதைந்தது. ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த துணை முதல்வர் நிம்மகாயல சின்னராஜப்பா, இன்று காலையில் அரசு மருத்துவமனைக்கு சென்று, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + fourteen =

*