;
Athirady Tamil News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது..!!

0

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆசிரியரின் இந்த அத்துமீறிய செயலை பொறுக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திருவிதாங்கோடு அரசு பள்ளியை இன்று காலை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் செல்லத்தை பாதிகப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கியுள்ளனர். அவரை போலீசார் மீட்டு கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − five =

*