;
Athirady Tamil News

மாணவர்கள் கொடுத்த அன்பு பரிசு: வார்த்தையின்றி கண்கலங்கிய துப்புரவு பணியாளர்..!!

0

பிரித்தானியாவின் Bristol University மாணவர்கள் அனைவரும் இனைந்து பணம் திரட்டி, துப்பரவு பணியாளருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் பிரபல University of Bristol-ல் கடந்த 12 வருடங்களாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் Herman Gordon.

கடந்த 1967-ம் ஆண்டு 15 வயதில் தன்னுடைய சொந்த நாடான ஜமைக்காவில் இருந்து, இங்கிலாந்திற்கு வருகை தந்தார். அதன் பின்னர் ஜமைக்கா திரும்பாத அவர், நீண்ட நாடகளாகவே தன்னுடைய உறவினர்களை சந்திக்காமல் இருந்து வந்துள்ளார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு Bristol-ல் பயிலும் 230 மாணவர்கள் இணைந்து, 1500 பவுண்ட்ஸ் திரட்டி கவரில் வைத்து, Herman-க்கு கொடுத்துள்ளனர்.

அதனை பிரிக்கும்பொழுதே பேசமுடியாமல் கண்களில் கண்ணீர் ததும்பும் அளவிற்கு மகிழ்ச்சியில் நின்ற Herman, மாணவர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்தார்

எங்களுடைய கல்லூரி வாழ்க்கையில் பல நாட்களை நீங்கள் பிரகாசமாக மாற்றியிருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நேசிப்பதோடு, பாராட்டுகிறோம் என மாணவர்கள் அனுப்பிய அந்த கவரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், உங்கள் குடுமபத்துடன் இணைந்து இந்த விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்

பின்னர் இதுகுறித்து Herman மனைவி Denise கூறுகையில், அவர் எனக்கு போன் செய்துவிட்டு பேச முடியாத அளவிற்கு உற்சாகத்தில் இருந்தார்.

அவரது வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை. நீண்ட நேரம் பேசாமல் அழுதுகொண்டே இருந்தார்

பின்னர் சிறிது நேரம் கழித்து, என்னால் நம்ப முடியவில்லை. நாம் ஜமைக்கா செல்ல போகிறோம். அங்கு என் மாமா ஜார்ஜ் மற்றும் எனது உறவினர்களை சந்திக்க உள்ளோம் என கூறியதாக தெரிவித்துள்ளார்

அதேசமயம் மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வு குறித்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

அதில் ஒரு மாணவர், “நான் சந்தித்ததிலே மிகவும் மகிழ்ச்சியான ஒரு மனிதர் இவர் தான். நீங்கள் சிரிக்க வேண்டும் என நினைத்தால் இரண்டு நிமிடம் மட்டும் அவருடன் பேசினால் போதும்” என பதிவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 8 =

*