;
Athirady Tamil News

விளையாட்டாக வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த சிறுவன்! 6 மணிநேரம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

0

போலந்து நாட்டில் தனது சகோதரியுடன் ஒளிந்து பிடிந்து விளையாடுகிறேன் என்ற பெயரில் வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து விளையாடிய 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Slupsk நகரில் மார்சல் என்ற 3 வயது சிறுவன் தனது சகோதரியுடன் இணைந்து ஒளிந்துபிடித்து விளையாட்டு விளையாடியுள்ளான். இதில் குளியலறைக்குள் இருந்த வாஷிங்மெஷினுக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.

இதில், வாஷிங்மிஷின் லாக் ஆனதால் அவனால் வெளியே வரவில்லை.

இந்நிலையில் சகோதரியும் தனது தம்பியை வீட்டில் தேடிப்பார்த்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான் என நினைத்துள்ளார்.

மேலும், பெற்றோரும் அவன் வெளியே சென்றிருப்பான் என தேடாமல் விட்டுள்ளனர், இந்நிலையில், சிறிது நேரம் கழித்து வாஷிங்மெஷினை திறந்துபார்த்த தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சுவாசிப்பதற்கு அச்சிறுவன் சிரமப்பட்டு சுமார் 6 மணிநேரம் கழித்து உயிரிழந்துள்ளான். தனது மகனின் இறப்பை தாங்கிகொள்ள முடியாத தாய் கதறி அழுதுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − five =

*